ADDED : மார் 15, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது.
அதன்படி நேற்று இன்ஸ்பெக்டர் கீதா,எஸ்.ஐ.,ராதா,எஸ்.எஸ்.ஐ.,முருகானந்தம் ஆகியோர் திண்டுக்கல் வத்தலக்குண்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம்,என்பவர் ஓட்டிவந்த ஆம்னி வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
போலீசார் அதை பறிமுதல் செய்து ஆறுமுகத்தை,கைது செய்தனர்.

