/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயர்ந்து விழும் நுாலக கூரையால் வாசகர்கள் அச்சம்
/
பெயர்ந்து விழும் நுாலக கூரையால் வாசகர்கள் அச்சம்
ADDED : அக் 18, 2024 08:01 AM

மர்மபொருட்களை கொட்டி தீ : சென்னமநாயக்கன்பட்டி விஸ்தரிப்பு பகுதியில் மர்மபொருட்களை மூடை மூடையாக கொட்டி மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் பொது மக்களுக்கு சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---தனசேகர், மீனாட்சி நகர்.
பெயர்ந்து விழும் கூரை : வடமதுரை கிளை நுாலக கூரை கான்கிரீட் துகள்களாக விழுகின்றன. இதனால் நுாலகத்தை பயன்படுத்தும் வாசகர்கள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. இதனை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---
-பாலமுருகன், வடமதுரை.
பள்ளம் மேடாக ரோடு : திண்டுக்கல் - நத்தம் ரோடு ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் ரோடு பள்ளம் மேடாக உள்ளதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.குட் ஷெட்டுக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-ராஜேஷ்குமார், திண்டுக்கல்.
சேதமடைந்த நுழைவுவாயில் : கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய நுழைவுவாயில் பொன்விழா தோரண வாயிலில் உள்ள எழுத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதை சீரமைக்க தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சக்திவேல், கொடைக்கானல்.
எரியாத தெரு விளக்குகள் : திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் நாகவேணி நகர் தெருவில் உள்ள மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது .இரவு நேரங்களில் இருளாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது . -கே.கோபிநாத் திண்டுக்கல்.
குடிநீர் தொட்டி கீழ் குப்பை : நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி முத்தாலபுரம் கிழக்குத்தெரு அங்கன்வாடி மையம் அருகே குடிநீர் தொட்டிக்கு கீழ் குப்பையில் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. அப்பகுதி மக்களும் நோய்தொற்றுக்கு ஆளாகின்றனர்.
-அய்யர்பாண்டி, முத்தாலபுரம்.
நோய் தொற்று அபாயம் : பழநி அருகே முல்லை நகர் கிழக்கு பகுதியில் பல நாட்களாகியும் குப்பை அகற்றப்படாததால் நோய் தொற்று அபாயம் உள்ளது. துர்நாற்றத்துடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மத் ஜின்னா, மானுார்.