/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் ஓட்டும்போது நெஞ்சுவலி ரியல் எஸ்டேட் அதிபர் மரணம்
/
கார் ஓட்டும்போது நெஞ்சுவலி ரியல் எஸ்டேட் அதிபர் மரணம்
கார் ஓட்டும்போது நெஞ்சுவலி ரியல் எஸ்டேட் அதிபர் மரணம்
கார் ஓட்டும்போது நெஞ்சுவலி ரியல் எஸ்டேட் அதிபர் மரணம்
ADDED : அக் 24, 2025 02:41 AM
திண்டுக்கல்: நிலக்கோட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் 56. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழில் விஷயமாக திண்டுக்கல்லுக்கு காரில் வந்தார். ஐய்யங்கார் பெட்ரோல் பங்க் அருகே காரை ஓட்டி வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு நடுரோட்டிலே காரை நிறுத்தினார்.
பின்னால் வந்தவர்கள் வெகுநேரமாக ஹாரன் அடித்தும் கார் நகராததால் வாகன ஓட்டிகள் இறங்கிவந்து பார்த்தனர். அப்போது டிரைவர் சீட்டில் சந்தோஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். அங்கு வந்த வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.