/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதை வாலிபர் லைசென்ஸ் கேன்சல் செய்ய பரிந்துரை
/
போதை வாலிபர் லைசென்ஸ் கேன்சல் செய்ய பரிந்துரை
ADDED : பிப் 17, 2024 05:47 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் நாகல்நகர் அருகே காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபரின் லைசென்சை கேன்சல் செய்ய போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்தனர்.
திண்டுக்கல் சாணார்பட்டி அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த டிரைவர் ராஜபாண்டி27. நேற்று முன்தினம் இரவு10:30 மணிக்கு மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி சென்றார். நாகர்நகர் அருகே ரோட்டில் நின்ற சிலரின் டூவீலர் மீது மோதியது.
பஸ் மீது உரசியப்படி சென்றது . அப்பகுதி மக்கள் கூடி தப்பி ஓட முயன்ற ராஜபாண்டியை பிடித்தனர்.
வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் காரை பறிமுதல் செய்து ராஜபாண்டியை கைது செய்தனர்.
இதையடுத்து அவரது லைசென்சை கேன்சல் செய்ய திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.