தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கொடைக்கானல் வளர்ச்சி பணிகளுக்கு பரிந்துரை: அமைச்சர் மரியவில்சன் தகவல்

கொடைக்கானல் வளர்ச்சி பணிகளுக்கு பரிந்துரை: அமைச்சர் மரியவில்சன் தகவல்

கொடைக்கானல் வளர்ச்சி பணிகளுக்கு பரிந்துரை: அமைச்சர் மரியவில்சன் தகவல்


UPDATED : செப் 15, 2026 08:16 PM

ADDED : செப் 15, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 08:16 PM ADDED : செப் 15, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செப்.,11ல் குடும்பத்துடன் வந்த நிதி அமைச்சர் மரியவில்சன் ஏரிச்சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி தொடர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.

நேற்று முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு நகராட்சி அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில், 'கொடைக்கானல் வளர்ச்சி அடையாமல் உள்ளது. ரோடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் உள்ளது. பட்டா பிரச்னை உள்ளது. பூங்கா பணியாளர்கள் பணி நிரந்தரமின்றி உள்ளனர். கொடைக்கானலில் ரோப் கார் சேவையை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகர் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளை செய்ய முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும். இயந்திர பயன்பாடுகள் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us