UPDATED : செப் 15, 2026 10:41 PM
ADDED : செப் 15, 2026 08:21 PM
திண்டுக்கல்:முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையின் 118 பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க., சார்பில் மாநகர செயலாளர் ராஜப்பா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேயர் இளமதி, முன்னாள் எம்.எல்.ஏ., காந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாரதிமுருகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமையில் அண்ணாத்துரை சிலைக்கு மாலை அணிவித்தனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
வடமதுரையில் நகர தி.மு.க., செயலாளர் கணேசன் தலைமையில் அண்ணாத்துரை படத்திற்கு மாலை அணிவித்தனர். துணை செயலாளர் வீரமணி, அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் லோகமணி, அன்னகாமு, இளைஞரணி நிர்வாகி சந்தானகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சவுந்தர்ராஜ், சகுந்தலா, மகேஸ்வரி பங்கேற்றனர்.
நத்தத்தில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை வகித்து அண்ணாத்துரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜெ.பேரவை மாநில இணை செயலாளர் கண்ணன், தொழிலதிபர் அமர்நாத், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாலன், மணிகண்டன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், தகவல் தொழில்நுட்ப அணி மதுரை மண்டல செயலாளர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.
