UPDATED : செப் 15, 2026 10:00 PM
ADDED : செப் 15, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம்:குருநாதநாயக்கனுார் அருகே மங்களப்புள்ளியில் மங்களவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. சுவாதி நட்சத்திரம் முன்னிட்டு இக்கோயிலில் மூலவர், நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் வேணுகோபால சுவாமிக்கு பன்னீர், சந்தனம், கரும்புச்சாறு, பால், தயிர், தேன் உள்பட 16 வகை திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது.
