/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் - பழனிசாமியை இணைத்து பதிவு வெளியீடு: தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது புகார்

ADDED : அக் 31, 2025 12:10 AM
வேடசந்துார்:  சமூக வலைதளங்களில் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியையும் இணைத்து பதிவு வெளியிட்ட வேடசந்தூர் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது, அ.தி.மு.க., பா.ஜ., ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளன.
வேடசந்தூர் பேரூராட்சி 2 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கற்பகத்தின் கணவர் வேல்முருகன் 35. இவர் சமூக வலை தளங்களில் நேற்று முன்தினம் கண்டுபிடிங்க என்ற தலைப்பில் எடை மிஷின், பெண்கள் உள்ளாடை, பழநி முருகன் கோயில், விக்ரம் நடித்த 'சாமி' படத்தின் போஸ்டர் என 4  படங்களை வெளியிட்டார். இதில் வரும்படங்களுக்கான பெயர் காரணத்தை சேர்த்தால் (இடைப்பாடி) பழனிசாமி என வருவது போல் வெளியிடப்பட்டிருந்து. இதனால் பழநி முருகனையும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியையும் இழிவுப்படுத்தியதாக கூறி கொந்தளித்த அ.தி.மு.க.,வினர் வேடசந்துார் பேரூராட்சி தி.மு.க., கவுன்சிலர் கற்பகத்தின் கணவர் வேல்முருகன் மீது வேடசந்துார் போலீசில் புகார் அளித்தனர்.
அவர் மீது ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி, பா.ஜ., சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.