/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரெட் கிராஸ் தின விளையாட்டு போட்டி
/
ரெட் கிராஸ் தின விளையாட்டு போட்டி
ADDED : மே 08, 2025 03:47 AM

ஒட்டன்சத்திரம்,: உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விளையாட்டு போட்டி ,பரிசளிப்பு நிகழ்ச்சி ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
டாக்டர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். பட்ஸ் கல்விக் குழும தாளாளர் பொன்கார்த்திக் முன்னிலை வகித்தார். சன் செட்டில் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் வரவேற்றார். திண்டுக்கல் மாவட்ட ரெட் கிராஸ் செயற்குழு உறுப்பினர் ஹெரால்ட் ஜாக்சன் பேசினார்.இரட்டை இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டுறவு துறை முன்னாள் துணை பதிவாளர் டேனியல், ஜவ்வாதுபட்டி யூனியன் வங்கி துணை மேலாளர் சரத், ஆசிரியர் சவுந்தரராஜன், எல்.ஐ.சி., மூத்த ஆலோசகர் கனகராஜ் கலந்து கொண்டனர்.ஓடைப்பட்டி கூட்டுறவு வங்கி செயலாளர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

