ADDED : செப் 17, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம், செப்.18-
திண்டுக்கல்- – பழநி ரோட்டில் சமீபத்தில் ஒரு பைக்கில் இருவர் அரிவாளுடன் சுற்றிய ‘ரீல்ஸ்’ சமூக வலைதளங்களில் பரவியது. எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் ரெட்டியார்சத்திரம் மாங்கரை கோகுல்குமார் 24, துளசி 25, ஆகியோர் பிடிபட்டனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
