தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாரம்பரிய சலகெருது ஓட்டம்

பாரம்பரிய சலகெருது ஓட்டம்

பாரம்பரிய சலகெருது ஓட்டம்


UPDATED : செப் 17, 2026 08:04 PM

ADDED : செப் 17, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 08:04 PM ADDED : செப் 17, 2026 07:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தேத்தாம்பட்டி சிக்கமநாயக்கர் மந்தையில் பாரம்பரிய சலகெருது ஓட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல், கரூர், திருச்சி பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் இணைந்து நடத்தினர்.

முன்னதாக கிராம தெய்வங்களுக்கு பூ வைத்தல், தீபாராதனை காட்டுதல் ஆகியன நடந்தது. தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் சுவாமி கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.

தொடர்ந்து நடந்த சலகெருது ஓட்டத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட மாடுகள் அலங்கரிக்கப்பட்டு மந்தைக்கு அழைத்து வரப்பட்டன. இளைஞர்கள் பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல், தலையில் தலைப்பாகை, கையில் கம்புடன் போட்டி போட்டுக்கொண்டு அவரவர் மாடுகளுடன் ஓடினர்.

எல்லைக்கோட்டை முதலில் தொட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தேத்தாம்பட்டி, சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us