sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அன்புடன் அதிகாரி பகுதிக்காக... தொழில் மையம் மூலம் ரூ. 26.10 கோடி மானியம்

/

அன்புடன் அதிகாரி பகுதிக்காக... தொழில் மையம் மூலம் ரூ. 26.10 கோடி மானியம்

அன்புடன் அதிகாரி பகுதிக்காக... தொழில் மையம் மூலம் ரூ. 26.10 கோடி மானியம்

அன்புடன் அதிகாரி பகுதிக்காக... தொழில் மையம் மூலம் ரூ. 26.10 கோடி மானியம்


ADDED : அக் 13, 2024 05:23 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் தொழில் மையம் மூலம் வழங்கப்பட்ட கடன்களுக்கு ரூ.26.10 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது '' என மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.

* மாவட்ட தொழில் மைய பணிகள்..

வேலைவாய்ப்புகளை நம்பி இல்லாமல் சுய வேலைவாயப்புகளை உருவாக்குவதோடு பலருக்கு வேலைவாயப்புகளை பெருக்குவதற்கான திட்டங்களை உருவாக்கி மத்திய, மாநில அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சாதகமான தொழில்களைக் கண்டறிவது, திட்ட அறிக்கைகள் தயாரிப்பது, அரசு வழங்கும் பல்வித ஒப்புதல்கள் உரிமங்கள் பெற உதவுவது மட்டுமன்றி அரசுத் திட்டங்கள் மூலம் கடனுதவி வழங்குதல், மானியம் வழங்குதல் போன்றவற்றால் இவை தொழில் முனைவோரின் நிதித்தேவைகளுக்கும் தீர்வளிக்கின்றன.

* செயல்படுத்தப்படும் திட்டங்கள்

மத்திய அரசின் நிதி கொண்டு செயல்படுத்தப்படும் பி.எம்.இ.ஜி.பி.,, முதல் தலைமுறை தொழில் முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்குக் கை கொடுக்கவும், ஊக்கமளிக்கவும் எனத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நீட்ஸ், பின்தங்கிய மக்கள் குழுவினரிடையே வேலைவாய்ப்பின்மை சிக்கலைத் தீர்க்க யூ.ஒய்.இ.ஜி.பி., என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது தவிர அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பி.எம்., உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் என செயல்படுத்தப்படுகிறது.

* பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ...

சுயவேலை வாய்ப்பினை ஊக்குவிப்பதற்காகவும் வேலைவாய்ப்பின்மைச் சிக்கலைத் தீர்ப்பதற்காகவும் மத்திய அரசின் நிதி கொண்டு செயல்படுத்தப்படும் திட்டம் பி.எம்.இ.ஜி.பி.,, இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை. இருந்தாலும் ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள்,ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுப்போர் குறைந்த பட்சம் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* யூ.ஒய்.இ.ஜி.பி. திட்டம் ...

யூ.ஒய்.இ.ஜி.பி. என்பது படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம். இது தமிழக அரசின் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் சுயமாக தொழில் தொடங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் வங்கிக் கடன் , மானியம் வழங்கப்படுகிறது.

* பட்டியல்,பழங்குடியினர்களுக்காக ஏதேனும் திட்டம் உள்ளதா...

சமூகநீதி சமத்துவத்தை முன்னிலைப்படுத்தம் வகையில் பட்டியல் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்காக உருவாக்கப்பட்டதுஅம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் . நேரடி வேளாண்மை நீங்கலாக உற்பத்தி வியாபாரம் செய்தல் இதில் அடங்கும். கல்வித் தகுதி தேவையில்லை. திட்ட மதிப்பில் மட்டும் 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

* இடைத்தரகர்கள் இடையூறு உள்ளதா...

வங்கியில் கடனுதவி பெற்று தருகிறேன், மாவட்ட தொழில் மையம் தொடர்பான சேவைகளை பெற்றுத் தருகிறேன் என கூறும் இடைத்தரகர்களை பொதுமக்கள் நம்ப வேண்டும். அனைத்து திட்டங்களுக்கும் இணைய வழியிலியே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தெரியவில்லை என்றால் நேரடியாக மாவட்ட அலுவலகத்திற்கு வந்து விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். நாங்களே இங்கேயே இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெற வழி வகுக்கின்றோம். இடைத்தர்கள் குறித்து எவரேனும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளோம். பொதுமக்கள் நேரடியாகவோ, இணைய வழியிலோ அணுகுங்கள்.

* இதுவரை வழங்கப்பட்ட மானியத் தொகை ...

திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 ம் ஆண்டு முதல் தற்போது வரை மாவட்ட தொழில் மையம் மூலம் 1,194 பயனாளிகளுக்கு ரூ.99.02 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் மானியமாக மட்டும் ரூ.26.10 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us