ADDED : ஆக 23, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல், : கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்தவர் ஜான்பாபு 38,இவரது மனைவி சசிரேகா. குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர்.
இதில் ஜான்பாபு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அலைபேசியில் தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து பதிவு செய்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் தற்கொலைக்கு தூண்டியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.