ADDED : பிப் 09, 2024 05:09 AM

பழநி: பழநி அடிவாரம் கிரிவீதியில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
பழநியில் கிரிவீதி பகுதியில் தற்காலிக,நிரந்தர ஆக்கிரமிப்பு இருந்தது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதல் படி வருவாய்த் துறையினர் ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்தனர். தாசில்தார் பழனிச்சாமி உத்தரவின் படி அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளில் உள்ள தற்காலிக கட்டுமானங்கள் ,விற்பனை பொருட்களை அகற்றிக்கொள்ள கால அவகாசம் கேட்டு அகற்றினர். நிரந்தர கட்டுமானங்கள் கட்டடம் இடிக்கும் கனரக வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது. கிரி வீதியில் சுற்றிலும் பல்வேறு இடங்களில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு முன்கூட்டியே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழக்கப்பட்டது. டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

