ADDED : பிப் 26, 2024 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அருகே செந்துறை சாலையில் உள்ளது புதுப்பட்டி ஊராட்சி. இந்த பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார்கள் வந்தது.
அதன் பேரில் மாவட்ட நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. நேற்று சாலையோர ஆக்கிரமிப்பில் இருந்த 2 வீடுகள் மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் சரவணன், - இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட நெடுஞ்சாலைதுறையினர், போலீசார் உடனிருந்தனர்.

