ADDED : ஆக 28, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
நத்தம், ஆக.29
நத்தம் அருகே மூங்கில்பட்டி பகுதியில் தாதன்குளம் உள்ளது. இந்த குளத்தில் 50-க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக வருவாய், நீர்வளத்துறையினருக்கு புகார் வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமித்து குடிசை அமைத்தவர்களை காலி செய்ய அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை.
இதையடுத்து தாசில்தார் டேனியல் பிரேம்குமார் மேற்பார்வையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 50-க்கும் மேற்பட்டோரை இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
