ADDED : ஆக 28, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஆக.29
கரூர் எம்.பி., ஜோதிமணி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் வடமதுரை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கே.புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.
இதனை திறந்து வைத்த எம்.பி., ஜோதிமணி வடமதுரை அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் தரையில் மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார். முன்னதாக வடுகம்பாடியில் பயணியர் நிழற்குடை, சுக்காம்பட்டி பூசாரிபட்டியில் பகுதிநேர ரேஷன் கடை, புத்துார் பூசாரிபட்டி அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்தார். பி.டி.ஓ.,க்கள் சீதாலட்சுமி, சரவணன், காங்., மாவட்ட தலைவர் சாமிநாதன், ஒன்றிய தலைவர் பாலமுருகன், நகர தலைவர் அனந்தவெங்கடேஷன், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் கோகுல்பிரசாத் பங்கேற்றனர்.
