/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க: அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் பாதிப்பு

ADDED : பிப் 10, 2025 05:28 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பின்புலத்தில் உள்ளதால் நடவடிக்கை எடுப்பதில்லை.மாவட்ட நிர்வாகம் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ளாட்சிகள் என அனைத்து பகுதிகளின் ரோட்டோரங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கிறது. ஆவின் உள்ளிட்டவை குறிப்பிட்ட இடங்களில் அனுமதி பெற்று வைக்கப்படுகிறது. அதனை ஒட்டி ரோட்டோரம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. குறிப்பாக அரசியல் கட்சியின் பிரமுகர்கள் பின்புலத்தில் இருப்பதால் இது போன்ற ஆக்கிரமிப்புகள் ஜோராக நடக்கின்றன.
ரோடுகள் மட்டும் ஆக்கிரமிக்கப்படுவதில்லை. குளம், கண்மாய் தொடங்கி அனைத்துமே ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது.
புதிய கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் என கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கோயில் நிலங்களும் விதிவிலக்கல்ல. ஏதேனும் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கச் சென்றால் அரசியல் கட்சியினரின் தலையீடுகள் அதிகளவில் இருக்கின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியினரின் தலையீடுகள் அதிகம் இருப்பதாக புகார்கள் எழுகின்றன. சமீப காலமாக இது அதிகரித்தது. இதனால் அதிகாரிளும் தயக்கம் காட்டுகின்றனர்.
பொதுமக்கள் ஆக்கிரமிப்பு என தொடர்ந்து புகார் அளித்த வண்ணமே இருக்கின்றனர். ஆனால் தீர்வுகள் ஏதும் கிடைப்பதில்லை. சாமன்ய ரோட்டோர மக்களின் வறுமையை பயன்படுத்தி அரசியல் கட்சியினர் இது போன்ற அரசு நிலங்களில் இடத்தில் உள்வாடகைக்கு விடும் சூழலும் இருக்கிறது.