/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் பெயர் பலகையை மறைக்கும் செடிகளை அகற்றலாமே: ஊர் பெயர் தெரியாது தடுமாறும் வெளியூர் ஓட்டிகள்
/
ரோடுகளில் பெயர் பலகையை மறைக்கும் செடிகளை அகற்றலாமே: ஊர் பெயர் தெரியாது தடுமாறும் வெளியூர் ஓட்டிகள்
ரோடுகளில் பெயர் பலகையை மறைக்கும் செடிகளை அகற்றலாமே: ஊர் பெயர் தெரியாது தடுமாறும் வெளியூர் ஓட்டிகள்
ரோடுகளில் பெயர் பலகையை மறைக்கும் செடிகளை அகற்றலாமே: ஊர் பெயர் தெரியாது தடுமாறும் வெளியூர் ஓட்டிகள்
ADDED : மே 06, 2025 06:38 AM

-ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய , மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள ரோடுகளில் ஊர்களுக்கு செல்லும் வழிகாட்டும் பெயர் பலகைகளை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள மரக்கிளை,செடிகளை அகற்றி பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுவதைவுயம் தடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் வழியாக தேசிய நெடுஞ்சாலைகள் ,மாநில நெடுஞ்சாலைகள் பல செல்கின்றன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஏராளமான ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகளில் இருந்து கிராமங்களுக்கு குழப்பம் இன்றி செல்லும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் பெயர்பலகைகள் உள்ளது. இவை பல இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் செடிகள் ,மரக்கிளைகள் மறைத்துள்ளது. பல இடங்களில் விளம்பர போஸ்டர் களை ஒட்டி ஊர்களின் பெயர்களை மறைத்து விடுகின்றனர். இன்னும் சில இடங்களில் பெயர் பலகைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இவ்வாறு இருப்பதால் வெளியூர்களில் இருந்து புதிதாக வரும் வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என குழப்பம் அடைகின்றனர். பெயர் பலகை அருகில் வந்து வாகனத்தை நிறுத்தி எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை பார்த்து பிறகு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால தாமதமும் ஏற்படுகிறது. வழிகாட்டும் பெயர் பலகைகள் வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும் வகையில் மறைக்கும் செடிகள் மரக்கிளைகளை அகற்றிட வேண்டும்.
.......
பராமரிப்பது அவசியம்
நாம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும் ஊர் பெயர் பலகைகளில் போஸ்டர்களை ஒட்டி மறைப்பது இன்றளவும் நடந்து கொண்டுதான் உள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள பெயர் பலகைகளை மறைக்கும் வகையில் டிவைடரில் வைக்கப்பட்டுள்ள செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்கள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தடுமாறி கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. பலகைகளை மறைக்கும் இத்தகைய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோடுகளை அடிக்கடி ஆய்வு செய்து குறைகளை கலைந்தாலே அதிகப்படியான விபத்துக்களை தவிர்க்கலாம்.
- சி.செந்தில்குமார், அ.தி.மு.க., இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய துணைத் தலைவர், ஒட்டன்சத்திரம்.
................