/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பன்றிமலை ரோட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவு
/
பன்றிமலை ரோட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவு
ADDED : டிச 15, 2024 06:09 AM

கன்னிவாடி : திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டி - பன்றிமலை ரோட்டில் தொடர் மழையால் மீண்டும் மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பன்றிமலை ரோட்டில் அமைதிச்சோலை அடுத்த 4வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் 2 நாட்களுக்கு முன் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறை கற்களுடன் மண் சரிந்து நடுரோட்டில் தேங்கிய நிலையில் இவ்வழித்தடத்தில் அனைத்து வகையான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் இயந்திரம் மூலம் சீரமைப்பு பணியும் நடக்க போக்குவரத்து சீரானது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 6 வது கொண்டை ஊசி வளைவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்களுடன் நடுரோட்டில் கற்களும் விழுந்ததால் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைத்த நிலையில் நேற்று காலை மீண்டும் 4வது வளைவு ரோட்டோர பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.