/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்டிப்பு காட்டலாமே n பெயர் பலகைகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள் n அலையாய் அலையும் வெளியூர் வாகன ஓட்டிகள்

ADDED : நவ 18, 2024 05:56 AM

-நான்குவழிச்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமப்புற, மாவட்ட இதர ரோடுகள் என அனைத்து ரோடுகளில் ஆங்காங்கே ஊர் பெயர்களை சுட்டி காட்டும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர ரோடுகள் பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்லும் இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டி, திசைகாட்டி பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இதுதவிர அரசின் திட்டப் பணிகளில் வேலையின் பெயர், மதிப்பீடு, ரோடு என்ற எவ்வளவு மீட்டர் போன்ற விபரங்களை குறிப்பிட்டு பெயர் பலகைகள் வைக்கப்படுகின்றன.
இதன் முக்கியத்துவம், பொது பயன்பாட்டின் அருமை தெரியாத சிலர் தங்களது சுய விளம்பர போஸ்டர்களை இவற்றின் மீது ஒட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள் பெயர் பலகை இருந்தும் விபரம் தெரிந்து கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர். இதன் அருமை தெரிந்த நல்ல மனிதர்கள் பெயர் பலகைகளில் இருக்கும் போஸ்டர்களை அகற்றி பொதுமக்களுக்கு உதவுகின்றனர்.
ஆனாலும் அவர்களால் முழுவதுமாக அகற்ற முடியாதபடி போஸ்டர் பசை பலகைகளில் ஒட்டி கொள்கிறது.
இதன் தாக்கமாக மழை, வெயில் காரணிகளால் பலகைகள் எளிதாக துருப்பிடித்து எழுத்துகள் சிதைந்து போகும் நிலை ஏற்படுகிறது. வெகு சில மாதங்களிலே இத்தகைய பெயர் பலகைகள் அலங்கோலமாக காட்சி அளிக்கின்றன.
இவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்களில் இருந்து சம்பந்தபட்ட நபர்களின் விபரங்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இவர்கள் மீது போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டப்படும் நிலை மாறும்.