ADDED : ஜன 28, 2025 05:54 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பொது நலசங்கத்தில் நடந்த   குடியரசு தின விழாவிற்கு  தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். தேசிய கொடியை பாருக்அலி ஏற்றினார்.
நிர்வாகிகள் மதாமோகன், மாதவன், வேலாயுதம். முத்தையா, நடராஜன், சவடமுத்து, சோழா சவுந்தர், பாண்டி பேசினர். பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.
*பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் கோபி கொடியேற்றினார். தலைவர் சியாமளா, துணைத் தலைவர் கல்பனாதேவி பங்கேற்றனர். சேவுகம்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் பாலமுருகன் கொடியேற்றினார்.
தலைவர் வனிதா தங்கராஜன், துணைத் தலைவர் தெய்வ ராணி  பங்கேற்றனர்.
வத்தலக்குண்டு பேரூராட்சியில் செயல் அலுவலர் சரவணகுமார் கொடியேற்றினார்.
தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி. டி. ஓ., முனியாண்டி கொடியேற்றினார்.   நகர கூட்டுறவு வங்கியில் பொது மேலாளர் வினோதினி தலைமை வகித்தார்.
நகை மதிப்பீட்டாளர் முத்துப்பாண்டியன் கொடியேற்றினார்.  வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டாரத் தலைவர் காமாட்சி தலைமை வகித்தார். நகரத் தலைவர் அஜிஸ் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் அஜீஸ் கொடியேற்றினார்.  துணைத் தலைவர் ராஜாங்கம் மத நல்லிணக்க உறுதி மொழி வாசித்தார்.

