/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
/
திண்டுக்கல்லில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2025 04:35 AM

திண்டுக்கல் : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் பூங்கொடி காலை 8:05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். போலீஸ், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விடுதலை போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள், வண்ண பலுான்களை பறக்கவிட்டார். எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., சேக் முகையதீன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பாக பணியாற்றிய 169 போலீசார், 172 அரசு அலுவலர்களுக்கும் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், 97 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.
மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்தார்.
பழநி சப் கலெக்டர் கிஷன்குமார், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(இணை இயக்குநர்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, விளையாட்டு அலுவலர் சிவா, நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், திண்டுக்கல் ஆர்.டீ.ஓ., சக்திவேல் பங்கேற்றனர்.
*திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன் கொடியேற்றினர்.
*திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா கொடியேற்றினார்.
*அரசு போக்குவரத்துக்கழகம் திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் சசிகுமார் தேசியக்கொடி ஏற்றினார்.* திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்தில் வன அலுவலர் ராஜ்குமார் கொடியேற்றினார்.
* திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம், கோல்டன்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் கசவனம்பட்டி வானவில் பார்வையற்றோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெம் லயன் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றினார்.
மதர் தெரசா மண்டல தலைவர் குமார், கேபினட் இணைச் செயலர் அருண்குமார், முன்னாள் மண்டல தலைவர் சித்தாண்டி, முன்னாள் தலைவர் வேல்ராஜ், முன்னாள் இணைச்செயலர் கணேசன், ஜெம் லயன் செயலர் காமராஜ், பொருளாளர் அருணாச்சலம், கோல்சிட்டி சங்க பட்டய தலைவர் செந்தில்குமார், செயலர் ராஜ்குமார், பொருளாளர் ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளியில் தாளாளர் தாமேதரன் தலைமையில் விழா நடந்தது. செயலர் நளினி முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்திரராஜன் பங்கேற்றனர்.
* ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் மிட்டவுன் சார்பில் நடந்த விழாவில் சங்க தலைவர் வரவேற்றார். முன்னாள் தலைவர் பிரேம்குமார் கொடியேற்றினார். ரோட்டரி இண்டிராக்ட் சேர்மன் ஆந்தந்தன் நன்றி கூறினார்.
* திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லுாரி கூடுதல் பொறுப்பு முதல்வர் நாகநந்தினி கொடியேற்றினார்.
* நி.பஞ்சம்பட்டியில் நடந்த விழாவில் தலைமையாரியர் பீட்டர் தேசிய கொடி ஏற்றினார்.
* ஸ்ரீ சாவித்திரி வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் பள்ளி செயலர் பஞ்ச வர்ணம் தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியர் கோமதி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி பங்கேற்றனர்.
* வ.உ.சிதம்பரம்பிள்ளளை சிலை அமைப்பு, பராமரிப்பு டிரஸ்ட் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலர் தனபாலன் வரவேற்றார்.
அரசு சார்பாக மேற்கு தாசில்தார் ஜெயப்பிரகாஷ் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொருளாளர் பெருமாள் சாமி , உறுப்பினர் மாரிமுத்து நன்றி கூறினர்.
*திண்டுக்கல்லில் டாக்டர்.ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதி பெறும் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பிள்ளையார் நத்த மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஊராட்சி தலைவர் உலகநாதன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் செல்வராணி முன்னிலை வகித்தார்.
தாளtளர் ஜாகீர் உசைன், முன்னாள் தாளாளர் அப்துல்முத்தலிப் பங்கேற்றனர். தலைமையாரியை வர்ஷினி வரவேற்றார். பேகம்சாஹிபாநகர தொடக்கப்பள்ளியில் பள்ளப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பரமன் தலைமை வகித்தார்.
முன்னாள் வார்டு உறுப்பினர் பாண்டியன், உள்ளூர் பிரமுகர் விக்னேஷ் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை ஜெஸிந்தாமேரி வரவேற்றார். அசனாத்புர தொடக்கப்பள்ளியில் 45 வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சின்னதம்பி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் நிகாராபானு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை அம்பிகாதேவி வரவேற்றார்.
*தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மாவட்ட செயலர் நாகராசன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் சுப்பிரமணியம் கொடியேற்றினார்.
ரயில்வே ஓய்வூதிய சங்க மண்டல ஆலோசகர் துரை கிருஷ்ணசாமி, செயலர் ஜெகநாதர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
* சின்னாளபட்டி காந்திகிராம பல்கலை.,யில் துணைவேந்தர் பஞ்சநதம் கொடியேற்றினார்.
*சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் பிரதீபா தலைமை வகித்தார். செயல் அலுவலர் இளவரசி கொடி ஏற்றினார்.
* சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
முதல்வர் திலகம் மரியாதையை ஏற்று தேசியக்கொடி ஏற்றினார்.
தாளாளர் சிவகுமார், மேலாளர் பாரதிராஜா, உதவி தலைமையாசிரியை வெண்ணிலா பங்கேற்றனர்.
* போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., ஜெயக்குமார் கொடியேற்றினார்.
* வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் கமிஷனர் கண்ணன் கொடியேற்றினார். ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
* பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பத்மலதா முன்னிலையில் தலைவர் நிருபாராணிகணேசன் கொடியேற்றினார். இளநிலை உதவியாளர் முரளிமோகன், தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.
* கலைமகள் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ஆர்.கே.பெருமாள், குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கண்ணன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி கொடியேற்றினர்.
* தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாக்கியராஜ் தலைமையில் பி.டி.ஏ., தலைவர் நரசிங்கன் கொடியேற்றினார்.
* கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வயநமசி முன்னிலையில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜரத்தினம் கொடியேற்றினார்.
-* அய்யலுார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து, எழுத்தர் மோகன், பங்கேற்றனர்.
*ரஞ்சித் மழலையர் துவக்க பள்ளியில் முதல்வர் மனோரஞ்சித் தலைமையில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார்.
* ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் கொடியேற்றினார்.
* தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குனர் சாந்தி முன்னிலையில் பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார்.
-* எரியோடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல்அலுவலர் சையது அபுதாகிர் முன்னிலை வகித்தார்.
* கலைவாணி மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் முன்னிலையில் நிறுவனர் சாவித்திரி கொடியேற்றினார்.
* புதுரோடு இ.என்.பி., துவக்க பள்ளயில் முதல்வர் ராமசந்திரபிரபு முன்னிலையில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார்.
*தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கிருஷ்ணவேணி முன்னிலையில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார்.
*ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தேசியக்கொடி ஏற்றினார். திட்ட அலுவலர் திலகவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வடிவேல் முருகன், பிரபு பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன்,பாலு பங்கேற்றனர்.
*ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பழனிச்சாமி தேசிய கொடி ஏற்றினார். துணை தாசில்தார்கள் நந்தகோபால், கனகராஜ், முருகேசன், அன்சாரி பங்கேற்றனர்.
* நகராட்சியில் தலைவர் திருமலைசாமி தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, கவுன்சிலர்கள் கண்ணன், செல்வராஜ் பங்கேற்றனர்.
*ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஒருங்கிணைப்பாளர் லதா கோரி ஏற்றினார், முதல்வர் சவும்யா பங்கேற்றனர்.
*காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மழலையர் துவக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கே.ரங்கசாமி கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி பங்கேற்றனர்.
* ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் திருப்பதி தேசிய கொடி ஏற்றினார். செயலர்கள் சுரேஷ், கண்ணன், மீனா பங்கேற்றனர்.
* பட்ஸ் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் கண்ணம்மாள் தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் பொன்கார்த்திக் பங்கேற்றனர்.
* காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரத்தினம் தேசிய கொடியேற்றினார். செயலாளர் சங்கீதா, பள்ளி முதல்வர் சிவகவுசல்யா தேவி பங்கேற்றனர்.
* ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி பள்ளியில் பள்ளித் தலைவர் சாமிநாதன் கொடி ஏற்றினார். தாளாளர் சித்தார்த்தன், செயலர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா, பள்ளி முதல்வர் நர்மதாஸ்ரீ பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
*தொப்பக்காவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தேசிய கொடி ஏற்றினார். ஆசிரியர் ஆனந்தம் பங்கேற்றனர்.
* ஒட்டன்சத்திரம் டயட்டில் முதல்வர் சங்கர் கொடியேற்றினர். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் ஆசைத்தம்பி, ஆசிரியர் அன்பரசன் முதுநிலை விரிவுரையாளர் பரிமளா கிருஷ்ணமூர்த்தி, ஆயுள் காப்பீட்டுக் கழக மூத்த ஆலோசகர் கனகராஜ் பங்கேற்றனர்.
* வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன் கொடியேற்றினார். பி.டி.ஓ., குமரேசன், தி.மு.க., நிர்வாகிகள் கவிதா, ரவிசங்கர், கவிதாமுருகன், நாகப்பன், சுப்பிரமணி பங்கேற்றனர்.
* பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மேகலா கொடியேற்றினார். செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிக்கந்தர், டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., பவித்ரா கொடியேற்றினர்.
* வேடசந்துார் சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி விஸ்வநாதன்,அரசு மருத்துவமனையில் டாக்டர் லோகநாதன் கொடியேற்றினர்.
* பி.வி.எம்., மெட்ரிக் பள்ளியில், தாளாளர் சூடாமணி கொடியேற்றினார்.பள்ளி முதல்வர் ராஜா பங்கேற்றார்.
* குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., மதியழகன் கொடி ஏற்றினார். கூடுதல் பி.டி.ஓ., வீர கடம்பு கோபு பங்கேற்றார்.
* பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் பழனிசாமி கொடியேற்றினார். செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி பங்கேற்றார்.
* கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலையில் இணை தலைவர் கிருஷ்ணன் கொடியேற்றினார். துணைப் பொது மேலாளர் (மனித வளம்) ஜெயபிரகாஷ், தலைமை பாதுகாவல் அதிகாரி சிவஞான சுப்பிரமணியன் பங்கேற்றனர்.
* டி.கூடலுார் வ.உ.சி., உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தங்கவேல் கொடியேற்றினார். பள்ளி செயலாளர் சிங்காரம், ஆசிரியர்கள் அசோகன், சந்துரு, முருகேசன் பங்கேற்றனர்.
* ஆலம்பாடி காந்தி சிலை முன்பு, காங்., விவசாய அணி மாநில செயலாளர் சோழராஜன் கொடியேற்றினார். காங்., மாவட்ட செயலாளர் ராமசாமி, உள்ளூர் பிரமுகர்கள் சீனிவாசன், முருகேசன் பங்கேற்றனர்.
* குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆறுமுகம், போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கலையரசன், அரசு மருத்துவமனையில் டாக்டர் முத்துக்குமார் கொடியேற்றினர்.
* தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில், தலைவர் கவிதா கொடியேற்றினார். துணைத் தலைவர் நாகப்பன், செயல் அலுவலர் சந்தனம்மாள், இளநிலை உதவியாளர்கள் மகாலிங்கம், அமுது பங்கேற்றனர்.
* அகரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் நந்தகோபால் கொடியேற்றினார். துணைத் தலைவர் ஜெயபால், செயல் அலுவலர் சூசை இன்பராஜ் பங்கேற்றனர்.
* ஸ்ரீ குருமுகி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.சி.,உயர்நிலைப் பள்ளியில், தாளாளர் திவ்யா கொடியேற்றினார். பள்ளி நிர்வாகி செந்தில்குமார், செயலாளர் டாக்டர் லக்சித், தலைமை ஆசிரியை சியாமளா பங்கேற்றனர்.
*பழநி நகர மேற்கு மண்டல காங்., கமிட்டி சார்பில் மேற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரமணி தலைமை வைத்தார். நகர காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் முத்து விஜயன் மாவட்ட துணைத்தலைவர் முருகானந்தம், முன்னாள் நகராட்சி உறுப்பினர் சுந்தர், மாவட்ட துணை தலைவர் நேரு பங்கேற்றனர்.
*பழநி பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் பங்கேற்றனர்.
* பழநி ஆயக்குடி, மா, தென்னை விவசாயிகள் சங்க துவக்க விழாவில் தலைவர் சக்திவடிவேல், செயலாளர் களஞ்சியம், பொருளாளர் ஜோதிபாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ஈசன் முருகேசன் பங்கேற்றனர்.
* நத்தம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி நல்லகண்ணன் தேசியகொடியேற்றினார். நத்தம் வக்கீல்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர்.
நத்தம் யூனியன் அலுவலகத்தில் யூனியன் ஆணையாளர்கள் குமாரவேல், மகுடபதி கொடியேற்றினர். நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா கொடியேற்றினார்.
செயல் அலுவலர் விஜயநாத், தலைமை எழுத்தர் பிரசாத்,துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ராமேரி பங்கேற்றனர்.
நத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாண்டியராஜ், தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் அம்சராஜன், நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., தர்மர், வனத்துறை அலுவலகத்தில் வனச்சரகர் ஜெயசீலன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன், ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ராமசாமி, துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ரவிச்சந்திரன், பண்ணுவார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் கோமளாதேவி தேசியக் கொடியை ஏற்றினர்.
*கொடைக்கானல் நகராட்சியில் பொறியாளர் செல்லத்துரை கொடியேற்றினர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், பா.ஜ.,சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்து கிளையில் மேலாளர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., மதுமதி கொடியேற்றினார்.
பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கொடியேற்றினார்.
கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆனந்தகிரியில் நடந்த விழாவில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களின் சுற்றுச்சூழல் தலைவர் டி.பி.ரவீந்திரன் கொடியேற்றினார்.
பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ரஞ்சித் குமார் கொடியேற்றினார். பள்ளி செயலர் சுவாமி கங்காதாரனந்த பங்கேற்றனர். தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் காபி வாரிய உறுப்பினர் ரவிச்சந்திரன் கொடியேற்றினார். துணை இயக்குனர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.