ADDED : ஜன 25, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (ஜன.26) குடியரசு தினவிழா நடக்கிறது. கலெக்டர் சரவணன் கொடி ஏற்றி ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார்.
இதையொட்டி நேற்று காலை ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் ஆண், பெண் போலீசார் துப்பாக்கியை ஏந்தியபடி அணிவகுத்து வந்தனர்.

