/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெயில் தாக்கத்தால் முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை
/
வெயில் தாக்கத்தால் முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை
வெயில் தாக்கத்தால் முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை
வெயில் தாக்கத்தால் முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை
ADDED : ஏப் 09, 2025 03:05 AM
திண்டுக்கல்:கோடை வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு 6ம் முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்க வேண்டு மென தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அதன் நிறுவனத்தலைவர் அருணன் கூறியதாவது:கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு அட்டவனையிட்டு ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 6 ம் வகுப்பு முதல் 9 ம் வரை மாணவர்களுக்கும் ஏப்.20க்குள் தேர்வுகளை முடித்து விடுமுறை அளிக்க வேண்டும்.
பெரும்பாலான உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் மதியம் தான் பள்ளிக்குவரவழைக்கப்படுகின்றனர்.
வழக்கத்தை விட இந்தாண்டு கோடை வெயில் வாட்டிவதைக்கிறது. மாணவர்கள் மதியம் பள்ளிக்கு வருவதாலும் பொதுத் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களை அமரவைக்க முடியாத சூழலும் உள்ளது.
எனவே 6ம் முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் முன்கூட்டியே தேர்வை நடத்தி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்றார்.