/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொய்த்த காலநிலை கணிப்புகள் துல்லியமாக கணிக்க வேண்டுகோள்
/
பொய்த்த காலநிலை கணிப்புகள் துல்லியமாக கணிக்க வேண்டுகோள்
பொய்த்த காலநிலை கணிப்புகள் துல்லியமாக கணிக்க வேண்டுகோள்
பொய்த்த காலநிலை கணிப்புகள் துல்லியமாக கணிக்க வேண்டுகோள்
ADDED : டிச 04, 2024 08:28 AM
திண்டுக்கல் : பெஞ்சல் புயலின் பாதிப்புகள் குறித்து தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட காலநிலை கணிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் பொய்த்துள்ளதால் சரியாக காலநிலைகளை கணிக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகள் வெளியிட்டது.
மழை பாதிப்புகளை துல்லியமாக ஆய்வு செய்யாததால் பல பாதிப்புகளில் மக்கள் சிக்கினர் என அரசியல் கட்சியினர்விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
நேற்றும் தமிழகத்தில் திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதைதொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறை அதிகாரிகள் 186 பேர் 10 தீயணைப்பு அலுவலகங்களிலும் தயார் நிலையில் இருந்தனர்.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை கனமழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் காலை 9:00 மணி முதல் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கணிப்பு பொய்த்துள்ளதாக மக்கள் பேசத்தொடங்கினர்.
அதிகாரிகள் தரப்பில் செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவையில்லாமல் போனது. இந்த அறிவிப்புகளால் கூலி வேலைகள் உட்பட பல்வேறு தொழில் செய்வோரும்,வியாபாரிகளும் தங்கள் வேலையை நிறுத்தினர்.
இதனால் பலதரப்பு மக்களும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளை வசைபாட தொடங்கினர். வானிலை ஆராய்ச்சி மைய கணிப்புகள் பொய்க்காமல் துல்லியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே மக்களின் நம்பிக்கையை பெற முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.