/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டின் பூட்டிய அறைக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு
/
வீட்டின் பூட்டிய அறைக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு
ADDED : நவ 18, 2024 04:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டில் பூட்டிய அறைக் குள் சிக்கிய 2 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
திண்டுக்கல் நந்தவனப்பட்டி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது 2 வயது மகன் அகிலேஷ். இவர் நேற்று தனது வீட்டில் விளையாடிய போது உள் அறைக்குள் தனியாக சென்று கதவை பூட்டினான். மீண்டும் சிறுவனால் கதவை திறக்க முடியவில்லை. வெளியில் வர முடியாது தவித்த சிறுவன் கூச்சலிட்டான். பெற்றோர் வெளியில் நின்றபடி கதறினர்.
திண்டுக்கல் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் பிரத்யேகமான கருவியை கொண்டு அறைக்கதவின் பூட்டை திறந்து உள்ளே சிக்கிய சிறுவனை மீட்டனர்.