ADDED : நவ 24, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சீலப்பாடி விநாயகா நகர், இராஜகாளியம்மன் நகர் விஸ்தரிப்புபகுதி குடியிருப்போர் நல சங்கத்தின் வழிகாட்டுக்குழு கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் மருதை தலைமை வகித்தார். செயலர் சின்னகருப்பன், பொருளாளர் ஆனந்த கிருஷ்ணன், ஆலோசகர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். 28 சங்க வழிகாட்டுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சாலையை சீரமைத்தல், அணுகுசாலையை சிமெண்ட் சாலையாக தரம் உயர்த்துதல் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வளர்ச்சிப்பணிகளுக்கு கருர் சாலை குடியிருப்போர் சங்க கூட்டமைப்பின் ஆதரவை கோருவது முடிவு எடுக்கப்பட்டது. சீனிவாசன் நன்றி கூறினார்.

