/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்போர் சங்க மகளிர் தின விழா
/
குடியிருப்போர் சங்க மகளிர் தின விழா
ADDED : மார் 19, 2024 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் செல்வவிநாயகர் கோயிலில் தலைவர் திராவிடமணி தலைமையில் மகளிர் தினவிழா நடந்தது.
சங்க நிர்வாகிகள் அமரசுந்தரி, சசிகலா, ஒகம்மை முன்னிலை வகித்தனர். குடியிருப்பு பகுதியின் வளர்ச்சி, துாய்மை பணி செயல்பாடுகளில் சேவை புரிந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
வண்ண கோலங்கள், மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் ரமா, விஜயா செய்தனர்.

