/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திறந்த வெளி கழிப்பிடம், நாய் தொல்லை பரிதவிப்பில் பழநி 15 வது வார்டு மக்கள்
/
திறந்த வெளி கழிப்பிடம், நாய் தொல்லை பரிதவிப்பில் பழநி 15 வது வார்டு மக்கள்
திறந்த வெளி கழிப்பிடம், நாய் தொல்லை பரிதவிப்பில் பழநி 15 வது வார்டு மக்கள்
திறந்த வெளி கழிப்பிடம், நாய் தொல்லை பரிதவிப்பில் பழநி 15 வது வார்டு மக்கள்
ADDED : டிச 06, 2024 06:26 AM

பழநி: திறந்தவெளி கழிப்பிடம்,நாய் தொல்லை என்பன போன்ற பிரச்னைகளுடன் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
லட்சுமிபுரம், வள்ளலார் தெரு, ஓம் சக்தி கோயில் தெரு, ராஜா நகரை உள்ளடக்கிய இந்த வார்டில் நாய் தொல்லை அதிகம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இங்கு செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றதால் மக்கள் பீதியில் உள்ளனர் .
மேலும் சில பகுதிகளில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதன் மூலம் தொற்று பரவலும் உள்ளது. ராஜா நகரில் திறக்கப்படாமல் உள்ள பூங்கா பாழாகும் நிலை உள்ளது.
பாதுகாப்பு இல்லை
ராமதாஸ், தனியார் நிறுவன ஊழியர், லட்சுமிபுரம் : பாதாள சாக்கடை திட்டம் தாமதப்பட்டு வருவதால் சுகாதாரப் பணியாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது .அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஜிகா பைப் திட்டத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் மக்கள் நடமாடுவதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
குப்பை குவியலால் அவதி
பாஸ்கர்,தனியார் நிறுவன ஊழியர், லட்சுமிபுரம்: ராஜா நகர் பூங்கா பயன்பட்டிற்கு வராமல் உள்ளது. அதனை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் சில நாட்களுக்கு முன் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., ரோட்டில் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுங்க
விஜயகுமார்,தனியார் நிறுவன ஊழியர், லட்சுமிபுரம் : லட்சுமிபுரம் பகுதிகளில் அந்நிய நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். இதனை தொடர்ந்து கண்காணித்து வெளிநபர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளதால் அதனை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
கந்தசாமி, கவுன்சிலர், (மார்க்சிஸ்ட், நகராட்சி துணைத்தலைவர்) : நகராட்சி பகுதி முழுவதும் நாய் தொல்லை அதிகம் உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் துவங்கும் இ.எஸ்.ஐ., ரோடு பகுதியில் குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜா நகர் பூங்காவில் 2 லட்சம் லிட்டர் நிலத்தடி தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெற்றபின் ராஜா நகர் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.