/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் பரிதவிப்பில் பழநி 30 வது வார்டு மக்கள்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் பரிதவிப்பில் பழநி 30 வது வார்டு மக்கள்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் பரிதவிப்பில் பழநி 30 வது வார்டு மக்கள்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் பரிதவிப்பில் பழநி 30 வது வார்டு மக்கள்
ADDED : அக் 30, 2025 04:21 AM

பழநி: நாய் தொல்லை, குழாய் அடிக்கடி உடைந்து வீணாகும் குடிநீர், தினமும் நெரிசல் என பழநி நகராட்சி 30 வது வார்டு மக்கள் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
மதனபுரம், குறவன்பாறை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டு பகுதி பக்தர்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக மாறி உள்ளது. கிரிவீதி அடைக்கப்பட்ட பின் பக்தர்கள் வாகனங்கள் அதிக அளவில் வருகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் என வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
தண்ணீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் வீணாவதால் தண்ணீர் பிரச்னை இங்கு அதிகம் உள்ளது.சமுதாயக்கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படும் நிலையில் புதியாக கட்டிய மையத்தை திறக்க நடவடிக்கை அவசியமாகிறது.
தேவை போலீஸ் கண்காணிப்பு மாரிமுத்து, வியாபாரி, திருஆவினன்குடி: எங்கள் பகுதியில் அங்கன்வாடி மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை விரைவில் திறக்க வேண்டும். மேலும் அங்கன்வாடி மையம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் கண்காணிப்பையும் தீவிர படுத்த வேண்டும்.
உள்ளூர் மக்களுக்கு சிரமம் ரமேஷ், போட்டோ கடை உரிமையாளர், அருள்ஜோதி வீதி: தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. சாலையில் செல்வோரை துரத்தி தொல்லை செய்கிறது. முதியவர்கள் குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். அருள்ஜோதி வீதியில் முகூர்த்த நாட்களில் வாகன நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. நோ பார்க்கிங் குறிப் பிட்டிருந்த போதும் வெளியூர் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் அதிக சிரமம் அடைகின்றனர்.
அங்கன்வாடி திறக்க நடவடிக்கை விமலபாண்டியன், கவுன்சிலர் (தி.மு.க.,): குப்பை இல்லாத பகுதியாக மாற்ற நகராட்சி அனுமதியுடன் செயல்படுத்த உள்ளேன். உடைந்த தண்ணீர் குழாய்கள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாயக்கூடம் கட்ட நகராட்சியில் கோரிக்கை விடுத்து வருகிறேன். நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசலை போலீசார் உதவியுடன் கட்டுப்படுத்த கோரி வருகிறேன் என்றார்.

