/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயன்பாட்டிற்கு வராத நடைபாதை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 10வது வார்டு மக்கள்
/
பயன்பாட்டிற்கு வராத நடைபாதை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 10வது வார்டு மக்கள்
பயன்பாட்டிற்கு வராத நடைபாதை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 10வது வார்டு மக்கள்
பயன்பாட்டிற்கு வராத நடைபாதை சிரமத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 10வது வார்டு மக்கள்
ADDED : ஜூன் 28, 2025 12:39 AM

ஒட்டன்சத்திரம்:சேதமடைந்த ரோடுகள், கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்பும் பயன்பாட்டிற்கு வராத நடைபாதை என ஒட்டன்சத்திரம் நகராட்சி 10வது வார்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் அதிகம் உள்ளன.
தென்றல் நகர், திருவள்ளுவர் சாலை, மார்க்கெட் பைபாஸ் ரோடு, திண்டுக்கல் பழநி சாலை, சடையப்ப நாயக்கர்பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் மழை காலத்தில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தற்போது வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு நீண்ட கால பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. நகராட்சி குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் தினந்தோறும் குப்பை அள்ளப்படுகிறது.
இதனால் வார்டுக்குள் குப்பை குவிவது இல்லை. சின்னகுளத்திற்கு செல்லும் ஓடையின் இரு பக்கங்களிலும் இருந்த செடிகள், சிறு மரங்கள் அகற்றப்பட்டு ஓடையை துார்வாரி சிமென்ட் தளத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
சின்னக்குளம் கரையை சுற்றிலும் ரூ.பல கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வீணாக உள்ளது.
இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தெரு ரோடுகளும் சேதமடைந்துள்ளது.
இவ்வழியே வாகனப் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. ரோட்டில் வாகனங்கள் வரைமுறையின்றி நிறுத்தப்படுவதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும்.
குறுகலான கால்வாய்
கீதா, பா.ஜ., வார்டு தலைவர், ஒட்டன்சத்திரம்: சின்னக்குளம் பகுதியில் ரூ.பல கோடி செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
திருவள்ளுவர் சாலையில் மழைக்காலத்தில் கழிவு நீர் தேங்காமல் இருக்கும் வகையில் கழிவு நீர் கால்வாயை அகலப்படுத்த வேண்டும். திருவள்ளுவர் சாலையிலிருந்து மார்க்கெட் செல்லும் இணைப்பு ரோட்டை சீரமைக்க வேண்டும்.
ரோட்டை சீரமையுங்க
சேகர், ஹிந்து வியாபாரிகள் நலச் சங்க அமைப்புச் செயலாளர்: காமாட்சி அம்மன் கோயில் எதிரில் தென்றல் நகர், மார்க்கெட் ரோடு சந்திக்கும் இடம் சேதமடைந்து காணப்படுகிறது.
தென்றல் நகருக்கு வரும் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். தெரு ரோடுகளும் சேதமடைந்துள்ளது. இவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும். வார்டுக்குள் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
பிரச்னைக்கு தீர்வு
ஆ.அம்ச நிவேதா, கவுன்சிலர் (தி.மு.க.,): மார்க்கெட் பைபாஸ் ரோட்டின் மேற்கு பகுதியில் மழைநீர் தேங்காமல் செல்ல வடிகால் அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.
இதன் பயனாக இப்பகுதியில் வடிகால்கள் அமைக்கப் பட்டு நீண்ட கால பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது.
சின்னக்குளம் தெற்கு பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தாராபுரம் ரோடு பிரிவிலிருந்து தென்றல் நகர் வரை புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும். திருவள்ளுவர் சாலை பகுதியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு வடிகால் அமைக்கப்பட உள்ளது என்றார்.
சேகர்
அம்ச நிவேதா
க்ஷ
சேகர்
அம்ச நிவேதா
க்ஷ