/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காங்., தலைவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்
/
காங்., தலைவரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்
ADDED : மார் 16, 2025 12:58 AM
திண்டுக்கல், ; திண்டுக்கல் மாநகர காங்., தலைவர் மணிகண்டனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென காங்., மாவட்ட ஆலேசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட காங்., கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பொட்டு செல்வம் தலைமையில் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜாஹீர் உசேன், குப்புசாமி, மாவட்ட துணைத் தலைவர் அரபுமுகமது, முன்னாள் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகிகள் நாசர், ஜோசப் மார்ட்டின், மிரைட்நசீர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் செல்வபெருந்தகைக்கு விரோதமாக செயல்பட்டு வரும் மாநகர காங்., தலைவர் மணிகண்டனை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் சர்மா, முபாரக்சேட், முகமது ஹருல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.