
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் காந்தி கலையரங்கில் தமிழர் கலாச்சாரக் குழு சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
குழுவின் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் குழு தலைவர் அய்யனார், ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ராக்கன், தமிழ்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துண்டு, வேட்டிகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டன.

