ADDED : பிப் 23, 2026 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி பட்டத்து விநாயகர் கோயிலில் கோயில் நிர்வாகம் சார்பில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நடந்தது.
பழநி கோயில் நிர்வாகம் சார்பில், சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி நேற்று பழநி டவுன், பட்டத்து விநாயகர் கோயிலில் நடந்தது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 35 மூத்த தம்பதியினர் பங்கேற்றனர். அவர்கள் தங்களுக்குள் மாலை மாற்றிக் கொண்டனர்.
அவர்களுக்கு புது பட்டாடைகள் வழங்கப்பட்டன. மேலும் தாம்பூலம், பிரசாதம், வழங்கப்பட்டன.
சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் மேலாளர் உமாமகேஸ்வரி, கோயில் அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், மூத்த தம்பதிகளின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

