/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓய்வு பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி
/
ஓய்வு பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி
ADDED : நவ 29, 2025 12:50 AM
திண்டுக்கல்: ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என கூறி ஓய்வு பேராசிரியரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் டெலிபோன் காலனியை சேர்ந்த ஓய்வு பேராசிரியர் எபினேசர் 70. சில வாரங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் தாங்கள் கூறும் செயலியை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து எபினேசரிடம் பேசிய நபர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியதோடு வர்த்தகத்துக்கான பயிற்சியும் அளிக்கப்படும் என்றார். இதை நம்பிய எபினேசரும் செயலியை பதிவிறக்கும் செய்து ரூ. 2 லட்சம், ரூ.4 லட்சம் என அடுத்தடுத்து செலுத்தி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அதிக வருமானம் கிடைத்தது. இதில் மகிழ்ச்சியடைந்த எபினேசர் ரூ.45 லட்சத்து 40 ஆயிரம் வரை முதலீடு செய்து ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
முதலீடு செய்த தொகை ,லாபத்துடன் சேர்த்து ரூ.1 கோடியே 25 லட்சம் அவருடைய கணக்கில் இருப்பதாக 'செயலி காண்பித்தது. பின்னர் அதை எடுக்க முடியவில்லை. தன்னுடன் பேசியவர்களை அவர் தொடர்புகொண்டு கேட்டார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததோடு மேலும் பணத்தை அதேசெயலி மூலம் முதலீடு செய்யும்படி வலியுறுத்தினர்.
சிறிது நேரத்தில் 'ஆப்' முடங்கியது. தனது பணத்தை அவர்கள் மோசடி செய்ததை உணர்ந்த எபினேசர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி விசாரிக்கிறார்.

