/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' இடும்பன் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் ': ஹிந்து தமிழர் கட்சி வேண்டுகோள்

ADDED : நவ 29, 2025 12:43 AM
திண்டுக்கல்: பழநி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது போல் இடும்பன் மலை, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலையின் உச்சியிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பழநி மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.பழநி தண்டாயுதபாணி சுவாமி மலை, இடும்பன் மலை வரலாற்று சிறப்புமிக்கது. இடும்பன் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என 2 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகிறோம். இது போல் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சுவாமி கோயில் மலை உச்சியிலும் திருக்கார்த்திகை தீபம் கோயில் சார்பில் ஏற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.