/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிய மூத்தோர் தடகள போட்டி வெள்ளி வென்ற ஓய்வு ஆசிரியர்
/
ஆசிய மூத்தோர் தடகள போட்டி வெள்ளி வென்ற ஓய்வு ஆசிரியர்
ஆசிய மூத்தோர் தடகள போட்டி வெள்ளி வென்ற ஓய்வு ஆசிரியர்
ஆசிய மூத்தோர் தடகள போட்டி வெள்ளி வென்ற ஓய்வு ஆசிரியர்
ADDED : நவ 23, 2025 03:33 AM

திண்டுக்கல்: சென்னையில் நடந்த ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஓய்வு ஆசிரியர் வெள்ளி வென்றார்.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து உட்பட 30 நாடுகளில் சேர்ந்த வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 4 ஆயிரம் பேர் பங்குபெற்ற இந்த போட்டியில் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கம்பு ஊன்றி தாவும் போட்டியில் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.,பட்டி கோபால் நகரை சேர்ந்த ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் சுப்பிரமணியன் 82, ஆசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார்.இந்த வெற்றி மூலம் தென் கொரியா நாட்டில் நடக்கும் உலக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.