ADDED : செப் 21, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி ,கல்லுாரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் வட்ட கிளை மாநாடு குஜிலியம்பாறையில் நடந்தது.
தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்காரம் வரவேற்றார். வட்ட செயலாளர் ரங்கசாமி ஆண்டறிக்கை வாசித்தார். உறுப்பினர் வெள்ளைச்சாமி தீர்மானம் வாசித்தார் மாவட்ட தலைவர் மோசஸ், மாவட்ட செயலாளர் அமுல்ராஜ் பேசினர். 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் மனோகரன், பொன்ராஜ், சுந்தரம், சுந்தரலிங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன், வட்ட செயலாளர் அருள் செழியன் பங்கேற்றனர்.