sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 நிதித்துறை செயலாளரை கண்டித்து வருவாய்த்துறையினர் மறியல் 320 பேர் கைது

/

 நிதித்துறை செயலாளரை கண்டித்து வருவாய்த்துறையினர் மறியல் 320 பேர் கைது

 நிதித்துறை செயலாளரை கண்டித்து வருவாய்த்துறையினர் மறியல் 320 பேர் கைது

 நிதித்துறை செயலாளரை கண்டித்து வருவாய்த்துறையினர் மறியல் 320 பேர் கைது


ADDED : மார் 05, 2026 04:55 AM

Google News

ADDED : மார் 05, 2026 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரனை கண்டித்து மறியல் செய்த பெரா கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்பட 320 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரசின் வருவாய், நில அளவைத் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் 10சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின்கூட்டமைப்பினர் (பெரா) பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சங்க மாவட்டத் தலைவர் ஜான்பாஸ்டின் தலைமையில் திண்டுக்கல்ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, எம்.ஜி.ஆர்., சிலை வரை ஊர்வலமாக சென்று ரோட்டில்அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்சுகந்தி முன்னிலை வகித்து பேசியதாவது:

வருவாய் கிராம உதவியாளர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்குவதற்கான கோப்புகள் தயார் செய்து வருவாய்த்துறை முதன்மை செயலர் கையெழுத்திட்ட நிலையில் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் கையெழுத்திட மறுக்கிறார். அவருக்கு என்ன பிரச்னை என தெரியவில்லை.

முதல்வர்ஸ்டாலின் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கான தொகை வழங்கி, தொகுப்பூதிய செவிலியர்களுக்குபணி நிரந்தர உத்தரவுகளை வழங்கி, கவுரவ பேராசிரியர்களுக்கு அதிகரித்த ஊதியத்தை வழங்கி அனைவருக்கும் நல்லதுசெய்துள்ள நிலையில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கான காலமுறை ஊதியம் வழங்குவது, நிதித்துறைசெயலாளரால் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் மறியல், போராட்டம் தொடர்கிறது என்றார்.

முன்னாள் மாநில துணைத்தலைவர் மங்களபாண்டியன், மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்முபாரக் அலி ஆகியோர் பேசினர். நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 320 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us