ADDED : ஜூலை 10, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 21 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டக் காலத்தை வரன்முறை செய்து அரசாணையாக வெளியிட வேண்டும்.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுகந்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெசி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக்அலி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
