ADDED : ஜூலை 10, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
செம்பட்டி: காமுபிள்ளை சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் சிறுதானிய உணவுத் திருவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை வகித்தார்.
சிறுதானிய வகைகள், அவற்றின் முக்கியத்துவம், பயன்படுத்தும் விதம் குறித்து ஆசிரியர்கள் இளம்பருதி, ஷோபனா, செல்வம் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
சிறுதானியம் மூலம் பல்வேறு வகையான உணவுப்பொருட்களை மாணவர்கள் தயாரித்து கண்காட்சி நடத்தினர். ஏற்பாடுகளை பசுமைப்படை பொறுப்பாசிரியர் விஜய் செய்திருந்தார்.
