ADDED : ஜூலை 10, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: சின்னாளபட்டி ஆர்.சி.சகாயராணி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடந்தது.
இதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு வாபஸ் உள்ளிட்டவை நடந்தது.
நேற்று தலைமை ஆசிரியர் மரியஜோதி தலைமையில் தேர்தல் நடந்தது. வெவ்வேறு அறைகளில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு மாணவர்கள் ஓட்டளித்தனர்.
பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு மாணவர் தலைவர்கள், துணைத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
