தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முதியவரிடம் மோதிரம் பறிப்பு

 முதியவரிடம் மோதிரம் பறிப்பு

 முதியவரிடம் மோதிரம் பறிப்பு


ADDED : ஜன 20, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 04:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியில் முதியவரை மயங்கச்செய்து மோதிரத்தை பறித்து சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர்.

வேடசந்துார் விஸ்வகர்மா நகரை சேர்ந்தவர் மரம் வேலை செய்யும் தொழிலாளி சின்னச்சாமி 81. வீட்டருகே உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்த போது டூவீலருடன் நின்ற ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது இரண்டு தோள்களையும் பிடித்து நல்லா பாருங்க எனக் கூறி உள்ளார்.

இதில் சுய நினைவை இழந்த சின்னச்சாமி தனது மோதிரத்தை கழற்றி கொடுத்துள்ளார். இதன் பின் அந்த நபர் அங்கிருந்து தப்பினார். சுய நினைவுக்கு வந்த முதியவர் வேடசந்துார் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்னச்சாமி கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் மோதிரம் ரூ.150க்கு வாங்கினேன். அதை மர்மநபர் பறித்து சென்று விட்டார் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us