/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்
/
குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்
குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்
குழாய் பதிக்க தோண்டப்பட்ட ரோடு சரியாக மூடாததால் விபத்து அபாயம்
ADDED : டிச 17, 2024 04:19 AM
குஜிலியம்பாறை: கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி, ஆர்.வெள்ளோடு, சத்திரப்பட்டி, கோட்டநத்தம், பாளையம் வழியாக சிவகங்கை மாவட்டத்திற்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லும் வகையில் சில மாதங்களாக பைப் லைன் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடங்களில் பைப் லைன் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் பைப் லைன் அமைத்தும் தோண்டப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாததால் சி.சி., குவாரி ரயில்வே பாலம் அருகே, சத்திரப்பட்டி ஊர் அருகே, காந்தி சிலை, காந்தி நகர் கிழக்கு பகுதி என பல்வேறு இடங்களில ரோட்டோரம் பெரும் பள்ளமாக மாறி உள்ளது.
குழாய் அமைக்கும் பணியில் ரோடும்சேதம் அடைந்த நிலையில் பள்ளங்களை முறையாக மூடாததால் டூவீலரில் செல்வோர் விழும் நிலை உள்ளது.
காங்., மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.பி.எம். ராமசாமி கூறியதாவது: குழாய் பதிப்பின் போது வழி ெநடுகிலும் தார் ரோடு சேதமடைந்து விட்டது.
பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடாததால் இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் விழும் நிலை உள்ளது.
இப்பகுதி மக்களின் நலன் கருதி தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாக மூட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

