ADDED : செப் 22, 2026 02:37 AM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: பெரியூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாண்டிக்குடி அருகே பெரியூர் ஊராட்சியில் சில மாதங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
பொதுமக்கள் அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். காஸ் சிலிண்டர்களும் சில மாதங்களாக முறையாக விநியோகம் செய்யப்படவில்லை.
இதனை கண்டித்து பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் - தாண்டிக்குடி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாண்டிக்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின் போக்குவரத்து சீரானது.
