தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மண், நீர் வளம் மீட்க தொடரும் களப்பணி

 மண், நீர் வளம் மீட்க தொடரும் களப்பணி

 மண், நீர் வளம் மீட்க தொடரும் களப்பணி


ADDED : செப் 22, 2026 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 02:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமாக இருப்பது தண்ணீர். இதன் மகத்துவத்தை உணர்த்தி பசுமை சூழலால் சுற்றுப்புறத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் 'வீடு தேடி லீடர்ஸ்' அமைப்பின் தன்னார்வலர்கள் தனித்துவமாக களப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சமீபத்திய தலையாய பிரச்னையான தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு மழையின்மை மட்டுமின்றி அபரிமித பருவகால தாக்கமே அடிப்படை. இதற்கு மனித செயல்களும் முக்கிய காரணம்.

மரங்கள் அழிப்பு, செயற்கை உரம், பூச்சி மருந்துகள், மக்காத கழிவுகள் பயன்பாடு, பாலிதீன் எரிப்பு, அதிகரித்த வாகன புகை போன்றவற்றால் காற்று, நீர், வான், நிலத்தை மாசுபடுத்தி வருகிறோம்.

நிலத்தடி நீரை காப்பதிலும், உயர்த்துவதிலும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. மாவட்டத்தின் பல்வேறு தனியார் அமைப்புகள் பசுமையை வளப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆத்துார் ஒன்றிய பகுதியில் இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் மரக்கன்றுகளின் மகத்துவத்தை கூறும் விழாக்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசியலில் இருந்து அமைப்பு உருவானபோதும் எவ்வித பாகுபாடின்றி மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் களப்பணிகளை முன்னெடுத்து மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் முனைப்பில் பல்வேறு பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

கிராமப்புற உட்புற ரோடுகள், குளக்கரைகள், கண்மாய்கள், வாய்க்கால்கள் என நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகளை இந்த அமைப்பு நடவு செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை பராமரித்து வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற் படுத்தி வருகிறது.

தேவைக்கேற்ற தேர்வு சந்தர், தன்னார் வலர், அய்யம்பாளையம்: அனைத்து வளங்களையும் மனித குலத்திற்கு அள்ளி வழங்கும் பூமியை பாதுகாப்பதன் மூலமே, எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை தக்கவைக்க முடியும். புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம், காற்று, நீர் மாசுபாடு போன்றவை மனித குலத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஆகும்.

வீடு தேடி லீடர்ஸ் அமைப்பின் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிக்கு, சில மாதங்களாக ஆத்துார் ஒன்றிய பகுதிகளில் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருகிறோம்.

சித்தையன்கோட்டை, சேடபட்டி, அய்யம்பாளையம், மருதாநதி, ஆத்துார் நீர்த்தேக்கப் பகுதி உள்ளிட்ட இடங்களில், தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து மரக்கன்றுகள் நடவு செய்து வருகிறோம்.

வனத்துறை ஒத்துழைப்புடன் வெவ்வேறு வகையான கன்றுகளை பெற்று, தண்ணீர் செறிவு பகுதியில் நீர்க்கடம்பு, புங்கன், மருத மரங்களையும், தண்ணீர் ஆதாரமற்ற இடங்களில் அரசு, இலுப்பை, புங்கன் போன்ற கன்றுகளை நடவு செய்து, பராமரித்து வருகிறோம்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு லட்சுமண மணிகண்டன், தன்னார்வலர், பித்தளைப் பட்டி: சூழலை மேம் படுத்தும் நோக்கில் ஓசோன், தண்ணீர், மூங்கில் தின விழாக்கள், சுற்றுச்சூழல் தினங்கள் உள்பட பல்வேறு விழாக்களின் நோக்கத்தை, பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்த்துள்ளோம்.

விழாக்களில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதுடன் மரக்கன்று வளர்க்க ஊக்கப்படுத்தும் நிகழ்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

அமைப்பு சார்பில் நடவு மட்டுமின்றி பசுமை பரப்பை அதிகரிக்க, பித்தளைப்பட்டி, சின்னாளபட்டி விநாயகர் சதுர்த்தி விழாவில் இலவச மரக்கன்றுகள் வழங்கினோம்.

அனைத்து விழாக்கள், பள்ளிகள், நாங்கள் பங்கேற்கும் பொது நிகழ்வுகளிலும் மரக் கன்றுகள் வழங்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது.

இந்த முயற்சிக்கு உதவ முன் வரும் தன்னார்வலர்கள் மூலம் பள்ளி மாணவர்களின் தேவைக்கு ஏற்ப மரக்கன்றுகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us