ADDED : செப் 22, 2026 02:36 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் குரூப் சார்பில் சோலார் விழிப்புணர்வு முகாம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
முதன்மை ஆராய்ச்சியாளர் பரத்ராம், ரகுமான் சேட் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் உஷா துவக்கி வைத்தனர்.
சோலார் தயாரிப்பு நிறுவனங்களும், வங்கிகளும் கண்காட்சி அமைத்து இருந்தன. சோலார், வங்கி மானியங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் நகர ஒருங்கிணைந்த வர்த்தக சங்க தலைவர் சுப்பிரமணியன், டாக்டர் ஆசைத்தம்பி கலந்து கொண்டனர். துணைச்செயலாளர் பழனிக்குமார் நன்றி தெரிவித்தார்.
