ADDED : ஜன 01, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் கோட்டையூர் ஊராட்சியில் உள்ள ஆண்டிபுரம் கிராமத்தில் 50-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் 3 மாதமாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை நத்தம்- கோட்டையூர் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்து காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினர்,போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.