/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.30 கோடியில் சாலைகள் சீரமைப்பு
/
ரூ.30 கோடியில் சாலைகள் சீரமைப்பு
ADDED : மே 30, 2025 03:44 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குழந்தை வேலப்பர் கோயில் மலை கிரிவலப் பாதையை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் நடந்த விழாவில் அமைச்சர் சக்கரபாணி குத்து விளக்கு ஏற்றியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டும் பேசியதாவது:
ஒட்டன்சத்திரம் நகராட்சியை துாய்மையானதாக மாற்றும் வகையில் குப்பை கிடங்கு , குப்பையை சேகரிக்க வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கழிவுநீர் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஏற்கனவே சாக்கடைகள் சீரமைக்கப்பட்டுள்ளன நிலையில் மேலும் ரூ.23 கோடி மதிப்பீட்டில் சாக்கடைகள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. நகராட்சியில் 440 மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்ட் அருகே சாலையை கடக்க நகரும் படிக்கட்டு , லிப்ட் வசதிக்கு அனுமதி கிடைத்துள்ளது என்றார்.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். நகராட்சிகளின் மண்டல இயக்குனர் முஜிபுர் ரகுமான், நகராட்சித் தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், எஸ். ஆர். கே.பாலு, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.